ட்ரெண்டிங்

ரம்ஜான்- சேலம் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்! 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, சேலம் வழியாக திருவானந்தபுரம்- ஷாலிமார் இடையே சிறப்பு ரயில்கள் (06081/ 06082) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 28, ஏப்ரல் 04 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து ஷாலிமாருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31, ஏப்ரல் 07 ஆகிய தேதிகளில் ஷாலிமாரில் இருந்து திருவனந்தபுரம் வடக்கிற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (மார்ச் 21) காலை 08.00 மணிக்கு தொடங்கியுள்ளது. 

இந்த சிறப்பு ரயில்கள், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.