அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டம், கருப்பூர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கும் எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்மேகம் இ.ஆ.ப. இன்று (நவ.16) காலை 10.00 மணிக்கு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இ.ஆ.ப., மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் இ.கா.ப., துணை காவல் ஆணையர்கள் பிருந்தா இ.கா.ப., மதிவாணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



