தமிழகம் முழுவதும் 22 தாசில்தார்களுக்கு துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கியும், 10 பேரை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சேலத்தில் பணிபுரிந்து வந்த சிராஜுதீன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நில எடுப்பு தனி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்த முருகேசன், திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலராகவும், சேலத்தில் இருந்த சுமதி கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், மாநிலம் முழுவதும் துணை ஆட்சியர் நிலையிலான 10 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த துரைசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேலம் மண்டல மேலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


