ட்ரெண்டிங்

 சந்தன மரம் வெட்டி கடத்தல் ... காவல்துறையினர் விசாரணை! 

சேலம் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில்  போடிநாயக்கன்பட்டி ஏரி உள்ளது. தற்போது இந்த ஏரியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காலை, மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்டோர் இங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் 

இந்த நிலையில், இன்று காலை நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆங்காங்கே மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடைப்பதை அறிந்த பொதுமக்கள் உடனடியாக சூரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் 

விரைந்து வந்த காவல்துறையினர், சந்தன மரம் வெட்டி அதை துண்டு துண்டாகப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இரண்டு மரங்கள் பாதியில் வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. 


இது குறித்து வனத்துறையினருக்கும் காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இரவு நேரத்தில் சந்தன மரங்கள்  வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.