சேலம், ஆக.15: ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சேலம் மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இன்று தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பெண்கள் வழிபட்டனர்.
இதே போல்,அஸ்தம்பட்டி மாரியம்மன் செங்கோல் அலங்காரத்திலும், அய்யந்திருமாளிகை மாரியம்மன் சமயபுரத்து அம்மன் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


