ட்ரெண்டிங்

சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு! 

 

சேலம் மாநகராட்சியில் தோற்றுவிக்கப்பட்ட 7 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர், செவிலியர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 7 மருத்துவ அலுவலர், 7 செவிலியர், 7 சுகாதார ஆய்வாளர், 7 மருத்துவப் பணியாளர், 1 மாவட்ட தர ஆலோசகர், 1 மருந்தாளுநர், 1 உதவிக் கணக்காளர், 1 ஆடியோலஜிஸ்ட், 1 பல் மருத்துவ உதவியாளர், 1 தடுப்பூசி மேலாளர், 1 ஏஎன்எம், 1 தூய்மைப் பணியாளர் என மொத்தம் 36 காலிப் பணியிடங்கள் உள்ளது. 

இதில் மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ் தேர்ச்சிப் பெற்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். செவிலியர் பணிக்கு டிப்ளமோ பிரிவில் நர்சிங் தேர்ச்சியும், மருந்தாளுநர் பணிக்கு டி.பார்ம் படித்திருக்க வேண்டும். இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது ஆகும். கொரோனா தொற்று காலத்தில் பணிப்புரிந்தமைக்கான சான்று இருந்தால், சம்மந்தப்பட்ட மருத்துவ அலுவலரிடம் சான்று பெற்று விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பப் படிவங்களை சேலம் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்திச் செய்த விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், பழைய நாட்டாண்மை கட்டிட வளாகம், சேலம்-636001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்திச் செய்த விண்ணப்பங்களை வரும் மார்ச் 24- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தகுதியான நபர்களுக்கு வரும் ஏப்ரல் 01- ஆம் தேதி அன்று நேர்காணல் நடத்தப்பட்டு ஏப்ரல் 02- ஆம் தேதி நேர்காணல் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.