ட்ரெண்டிங்

விஜய் பிறந்தநாள்- சேலத்தில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்! 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் 50- வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர், விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 

அந்த வகையில், த.வெ.க.வின் சேலம் மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. த.வெ.க.வின் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் ஆ பார்த்திபன், விஜய் நீடூடி வாழ வேண்டி, கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. 

அதேபோல், சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை, குகை, சீலநாயக்கன்பட்டி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு மதிய உணவுகளை வழங்கியும், பெண்களுக்கு சேலைகளை வழங்கியும், விஜய் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.