ஈரோடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று (மார்ச் 12) பிற்பகல் 12.00 மணிக்கு சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. அப்போது, தனியார் பேருந்து சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னாள் அதிவேகமாக வந்த கார் பேருந்தை முந்த முயன்ற போது பேருந்தின் முன்பக்கம் மீது மோதியது.
துரிதமாக செயல்பட்ட தனியார் பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி கீழே இறங்கினார். பேருந்தில் பயணித்த பயணிகளும் கீழே இறங்கினர். காரில் காயங்களுடன் இருந்தவர்களை பேருந்தின் ஓட்டுநர், பயணிகளின் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



