ட்ரெண்டிங்

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்! 

சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் வாழப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 11- ஆம் வகுப்பு பயிலும் 702 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் மத்தியில் அமைச்சர் உரையாற்றினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப., தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.