ட்ரெண்டிங்

ஜவுளிகளை வாங்க கடைவீதியில் அலைமோதிய கூட்டம்!

 

தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், இன்னும் 2 நாட்களே இருப்பதால் சேலம் கடைவீதிகளில் ஜவுளி விற்பனை களைகட்டியுள்ளது. கடைவீதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ள நிலையில், சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

 

தீபாவளி பண்டிகைக்கான இறுதிக்கட்ட விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜவுளிக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை எடுத்து மகிழ்கின்றனர். 

 

அதேபோல், சாலையோர ஜவுளிக்கடைகளிலும் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு ஏராளமான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அதேபோல், தங்க நகைக்கடைகள் மற்றும் பட்டாசு கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது.