ட்ரெண்டிங்

சூப்பர் கிளைமெட்...ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்! 

ஏற்காட்டில் சூப்பர் கிளைமெட் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். 

சேலம் மாவட்டம், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா. புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். 

தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி ஏற்காட்டிலும் வெயில் கொளுத்தியது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. படகு இல்லம், பூங்காக்கள், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்கள் வெளிச்சோடி காணப்பட்டன. 

இந்த சூழலில், நேற்று ஏற்காட்டில் பனிமூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது. அத்துடன், சாரல் மழையும் பெய்ததால் சீதோஷண நிலை காணப்பட்டது. சட்டென மாறிய வானிலை காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் சாலையோர கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.