ட்ரெண்டிங்

மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் காலங்களிலேயே.....- ஆட்சியர் அறிவுறுத்தல்! 

 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியினை சேலம் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி  இன்று (மார்ச் 11) தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையினர் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், இன்றையதினம் மாணவ, மாணவிகளிடையே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.குறிப்பாக,மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் காலங்களிலேயே சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலம் வாழ்வில் தன்னம்பிக்கை மிக்கவர்களாக திகழ முடிகிறது. 

இன்றைய தினம் நடைபெறும் போட்டியானது தமிழில் 10 தலைப்பிலும், ஆங்கிலத்தில் 10 தலைப்பிலும் நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேச்சுப் போட்டியானது நடத்தப்பட்டது. மேலும், மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளிலும் பங்கேற்பார்கள். வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்ச்சியில்,மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன்,மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில் அரசன், கல்லூரி முதல்வர் முனைவர் செண்பகலட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.