சேலம் மாநகராட்சியின் 26- வது ஆணையாளராக முனைவர் இளங்கோவன் இன்று (மார்ச் 10) தனது அலுவலகத்திற்கு சென்று முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார்.
சேலம் மாநகராட்சி இருந்த ரஞ்ஜீத் சிங், தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து திருப்பூரில் நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குநராகப் பணியாற்றி வந்த இளங்கோவனுக்கு, கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு சேலம் மாநகராட்சி ஆணையாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, இன்று நண்பகல் 12.10 மணியளவில் சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு இளங்கோவன் வந்தார். பின்பு மாநகராட்சி அலுவலகம் சென்ற அவர் அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டு சேலம் மாநகராட்சி ஆணையாளராகப் பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து துணை ஆணையாளர் அசோக்குமார், உட்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அவருக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


-SXgDfGgJfO.jpg)