ஆன்மிகம்

ஐயப்பன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம்!

 

கார்த்திகை 1- ஆம் தேதியான இன்று (நவ.17) ஐயப்பன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

அந்த வகையில், சேலம் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயில், குரங்குசாவடி ஐயப்பன் கோயில், அம்மாபேட்டை குருவாயூர் கோயில், செங்குந்தர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோயிகளில் இன்று (நவ.17) அதிகாலை முதலே ஐயப்பன் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

 

கோயிலில், துளசி மாலை அணிந்து விரதத்தைப் பக்தர்கள் தொடங்கியுள்ளனர். மண்டல பூஜைக்கு 41 நாட்களும், மகரவிளக்கு பூஜைக்கு 60 நாட்களும் விரதம் இருந்து பக்தர்கள், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடிக் கட்டிக் கொண்டு செல்லவுள்ளனர்.

 

சபரிமலை கோயில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பூக்கள் மற்றும் பூஜைப் பொருட்கள், துளசி மாலைகள் உள்ளிட்டவைகளை வாங்க கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனிடையே, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, குண்டு மல்லிகை கிலோ 800 ரூபாய்க்கும், முல்லை 600 ரூபாய்க்கும், காக்கட்டான் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.