ட்ரெண்டிங்

மது வகைகளுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருசில கடைகளில் க்யூஆர் கோடு ஸ்கேன் பழுது எனக் கூறி மதுவகைகளுக்கு ஊழியர்கள் கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

 

சேலம் மாவட்டத்தில் 180- க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் மூலம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. இந்த நிலையில், கடந்த சில மாதமாக க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் க்யூஆர் கோடு ஸ்கேன் வழங்கப்பட்டுள்ளது. 

 

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே உள்ள வேலுநகர் உள்ளிட்டக் கடைகளில் க்யூஆர் கோடு ஸ்கேன் பழுதாகிவிட்டது எனக்கூறி பழைய முறையில் பாட்டில்களை ரொக்கமாகப் பெற்று வந்தனர். அப்போது, கூடுதல் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.

 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்ய வழிவகை வேண்டும். கூடுதல் பணம் வசூலித்த ஊழியர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுப்பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.