ட்ரெண்டிங்

சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜன. 31- ம் தேதி அன்று

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் ஜனவரி 2025 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்

கூட்டம் வருகின்ற ஜன.31- ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215-ல் நடைபெற உள்ளது.

 

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.