சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து விமான சேவையைத் தொடங்குவதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில், சேலம் விமான நிலையத்தை உதான் 5.0 திட்டத்தின் கீழ் இணைத்துள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 16- ஆம் தேதி முதல் கொச்சின்- சேலம்- கொச்சின், பெங்களூரு- சேலம்- பெங்களூரு ஆகிய வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கவுள்ளது.
இது குறித்து சேலம் விமான நிலைய இயக்குநர் ரமேஷ் கூறுகையில், அக்டோபர் 16- ஆம் தேதி விமான சேவைத் தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்டப் பணிகள் சேலம் விமான நிலையத்திற்கு மும்முரமாக நடந்து வருகிறது. இந்த விமான சேவைகளைப் பயன்படுத்தி மக்கள் பயன் பெற வேண்டும்.
அதேபோல், அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் சேலம்- பெங்களூரு- ஹைதராபாத், ஹைதராபாத்- பெங்களூரு- சேலம் ஆகிய வழித்தடத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கவுள்ளது. சென்னை- சேலம் இடையேயான விமான சேவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.



-hcTFAGMRGb.jpg)