ட்ரெண்டிங்

வடகிழக்கு பருவமழை- சேலத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு! 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே சேலம் மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், சேலம் மாநகரில் பழைய பேருந்து நிலையம் பகுதிகள், கிச்சிப்பாளையம், குகை போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். 

இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் வடிகால் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த சூழலில், சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக மழைநீர் அதிக அளவு தேங்கக் கூடிய குடியிருப்பு பகுதிகளான பச்சப்பட்டி, ஆறுமுக நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரன் இன்று (அக்.15) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

ஆய்வின் போது, ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி அணையாளர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.