ட்ரெண்டிங்

கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! 

தாம்பரம்- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் மார்ச் 30- ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கும், ஏப்ரல் 01- ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், கோட்டயம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.