ட்ரெண்டிங்

சேலம் ரயில் நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்!

 

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நாள்தோறும் 50- க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்துச் செல்கின்றன. நாள்தோறும் சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள், இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக மத்திய ரயில்வேத் துறை அமைச்சகம் சார்பில் அம்ரித் பாரத் திட்டத்தின் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் ரயில்வே நிர்வாகமும், குளோபல் பவுண்டேஷனும் இணைந்து பயணிகளின் வசதிக்காக, சேலம் ரயில் நிலையத்தின் 4ஆவது மற்றும் 5ஆவது நடைமேடைகளில் இரண்டு Water Vending Machines வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் இன்று (ஜன.27) செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் 300 மி.லி முதல் 5 லிட்டர் வரையிலான சுத்தமான குடிநீரை பயணிகள் பெற முடியும். 

 

தண்ணீர் பாட்டிலுடன் கூடிய 300 மி.லி. அளவு தண்ணீர் ரூபாய் 2- க்கும், தண்ணீர் பாட்டிலைத் தவிர்த்து தண்ணீர் ரூபாய் 1- க்கும், 500- மி.லி. அளவு தண்ணீர் பாட்டில் ரூபாய் 5- க்கும், பாட்டில் தவிர்த்து 500 மி.லி. தண்ணீருக்கு ரூபாய் 3- க்கும், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 8- க்கும், பாட்டில் தவிர்த்து ரூபாய் 5-க்கும், 2 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 12- க்கும், பாட்டில் தவிர்த்து ரூபாய் 8- க்கும், 5 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூபாய் 25- க்கும், பாட்டில் தவிர்த்து ரூபாய் 20- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 

இந்த இயந்திரங்கள் மூலம் தண்ணீரைப் பெறுவதற்கு நாணயங்கள் மூலமும், யுபிஐ பணப் பரிவர்த்தனை மூலமும் கட்டணத்தைச் செலுத்தி தண்ணீரைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.