ட்ரெண்டிங்

அரக்கோணம்- சேலம் ரயில் சேவை ரத்து!

 

அரக்கோணம்- சேலம்- அரக்கோணம் மெமு தினசரி ரயில் சேவையை ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரத்தில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும் சேலம்- அரக்கோணம், அரக்கோணம்- சேலம் மெமு ரயில்கள் (16087/ 16088) ஜனவரி 20- ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரயில் சேவை ரத்துச் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சேலம்- அரக்கோணம் ரயில் சேவை ரத்தால் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். 

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மஹா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு ரயில்களுக்கான இந்த ரயிலின் பெட்டிகள் அம்மாநிலத்திற்கு சென்றுள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.