ட்ரெண்டிங்

தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு!

 

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தலைமையில் இன்று (ஜன.25) சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

 

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் உருவான ஜனவரி 25 தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைபிடித்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்றையதினம் 15- வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

 

இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும். அதற்கான வசதிகளை எற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். தேசிய வாக்காளர் தினத்தன்று வாக்காளர்களுக்கு தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 2025-ஆம் ஆண்டின் கருப்பொருளாக வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன் (Nothing like Voting, I vote for sure) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்த்திட வேண்டும். 

 

சிறப்புமுறை திருத்த முகாம் மட்டுமல்லாது அனைத்து நாள்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் மாற்றுதல், முகவரி மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதேபோன்று, கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் உங்கள் அருகில் உள்ள அனைவருக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

முன்னதாக, தேசிய வாக்காளர் தின உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டாக்டர்.பிருந்தாதேவி தலைமையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரிடையே நடத்தப்பட்ட சுவரொட்டி வரைதல், ரங்கோலி வரைதல், இசை நிகழ்ச்சி, பேச்சுப்போட்டி மற்றும் விழிப்புணர்வு பாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மயில், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத் தலைவர் அத்தியண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.