சேலம் மாநகராட்சி,அஸ்தம்பட்டி மண்டலத்தில் 4,5,6,7,8,12,13,14,15,16,17,29,31,32 ஆகிய 14 வார்டுகளில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன,சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
முதியோர் உதவித்தொகை,பட்டா,
ரேசன் கடை, குடிநீர் வசதி, இலவச வீடு, சாலை வசதி, சாக்கடை வசதி,
அடிப்படை வசதி போன்ற மனுக்களை வழங்கினர்.
முத்தமிழ்அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், 25 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக் குழு தலைவர் உமாராணி, கட்சியின் தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை,
வக்கீல் லட்சுமண பெருமாள்,
பனமரத்துப்பட்டி ராஜா,விக்டர்,
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், முன்னாள் விவசாய அணி அமைப்பாளர் செந்தில்,
ஆட்டோ கோபால், ஆட்டோ ரஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


