ட்ரெண்டிங்

பணம், தங்கம், வெள்ளி கருவூலத்தில் ஒப்படைப்பு!

 

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில் அன்னை தெரசா என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி சுமார் ரூபாய் 500 கோடி அளவிற்கு பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக சென்ற மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், மண்டபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். 

 

அந்த சோதனையில் ஆங்காங்கே வீசப்பட்ட சுமார் ரூபாய் 12.60 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 வெள்ளிப் பொருட்களைப் பறிமுதல் செய்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் பறிமுதல் செய்தவர்களை காவல்துறையினர் ஒப்படைத்தனர். 

 

மேலும், இது தொடர்பாக அறக்கட்டளையின் தலைவர் விஜயாபானு, நிர்வாகிகள் ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், கோவை மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

 

அதேபோல், மண்டபத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வீடியோ எடுத்த போது அவர்களை தாக்கியதாகக் கூறி, அங்கிருந்த 12 பேரை கைது சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், 15 நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.