சேலம் அம்மாப்பேட்டையில் சிவகாமி திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடி அளவில் மோசடி செய்த அறக்கட்டளையின் தலைவர் விஜயாபானு, நிர்வாகிகள் பாஸ்கர், ஜெயப்பிரதா ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இங்கு பணம் செலுத்தியவர்கள் பெரும்பாலானோர் பெண்கள். பெண்களை கவரும் வகையில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பணத்தை டெபாசிட் செய்ய தூண்டியுள்ளனர். இதனால் வயதானவர்கள், அன்றாடம் கூலி வேலைக்கு சென்ற பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெபாசிட் செய்துள்ளனர்.
காவல்துறையினரின் அதிரடியால் டெபாசிட் செய்யவிருந்தவர்களும் தப்பித்தனர். இது குறித்த தகவலறிந்த பணத்தை டெபாசிட் செய்தவர்கள் மண்டபம் முன்பு திரண்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாப்பேட்டை ரவுண்டானா முதல் அம்மாப்பேட்டை காமராஜர் நகர் காலனி வரை பரபரப்புடன் காணப்படுகிறது.
எந்த திசையில் திரும்பினாலும் நான் ரூ 1 லட்சம் போட்டேன், ரூ.10,000 போட்டேன் போன்ற குரல்கள் நம்மை வேதனையை அடையச் செய்தது.


-SXgDfGgJfO.jpg)