ட்ரெண்டிங்

அனைத்து கிராம‌ ஊராட்சிகளிலும் கிராம‌ சபைக் கூட்டம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற ஜன.26- ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற ஜன.26- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேற்படி, கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

 

மேலும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம். இணைய வழி வரி செலுத்துதல் சேவை இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விபரங்கள் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

 

மேற்கண்ட கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.