சேலத்தில் தனியார் தொலைக்காட்சியின் 3- வது மாடியில் மர்மமான முறையில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சேலம் அழகாபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அறைக்குள் சென்று பார்த்தபோது இறந்த நிலையில் சடலமாக வாலிபர் ஒருவர் கிடந்துள்ளார்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், உயிரிழந்தவர் யார்? என்பது தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலை செய்துக் கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



-SXgDfGgJfO.jpg)