ட்ரெண்டிங்

இறுதி சடங்கு ஊர்வலத்தில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியில் மணி பிரகாஷ் என்ற இளைஞர் நேற்று (செப்.27) தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். அவரின் உடல் நேற்று (செப்.27) மாலை நல்லடக்கம் செய்வதற்காக அமரர் ஊர்தி மூலம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அப்போது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வாகனம் முன்பு பட்டாசு வெடித்தவாறு வந்துக் கொண்டிருந்தனர். சின்ன திருப்பதி அருகே உள்ள பிரிவு சாலையில் பட்டாசு வைத்துள்ளனர். வெடித்த பட்டாசு அவர்கள் கையில் வைத்திருந்த பட்டாசில் விழுந்த நிலையில், அனைத்தும் வெடித்து சிதறியது. இதில் பரணிதரன் என்ற இளைஞர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.