சேலம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜன.29- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பொதுப்பெயர் மருந்துகளையும், பிற வகை மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் கடந்த சுதந்திர தின விழாவில் அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள தொழில் முனைவோர் டிசம்பர் 10- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி 29- ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு அரசு ரூபாய் 1.50 லட்சம் மற்றும் மருந்துகள் கொள்முதல் செய்ய ரூபாய் 1.50 லட்சம் அளவிற்கு நிதியுதவி அளிக்கப்படுவதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



-SXgDfGgJfO.jpg)