ட்ரெண்டிங்

ஜன.15- ல் இறைச்சிக் கூடங்கள் செயல்படாது!

 

திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் ஜனவரி 15- ஆம் தேதி அன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவர் தினத்தன்று (ஜன.15) சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் செயல்படும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.

 

அரசின் உத்திரவிற்கிணங்க, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளைமூடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சி கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.