ட்ரெண்டிங்

மழலையர் வகுப்பு மாணவர்களின் பாரம்பரிய உணவுத் திருவிழா!

 

சேலம் அம்மாப்பேட்டை அருகில் இயங்கி வரும் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பள்ளி சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று (ஜன.11) பாரம்பரிய உணவு திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதில் மழலையர் வகுப்பு மாணவர்கள் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளையும், அதனை செய்யும் மூலப்பொருட்களையும் காட்சிப்படுத்தினர். சிறப்பு விருந்தினர்களும், பார்வையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர்.

பள்ளி முதல்வர் சகோ.சேசுராஜ், சி.எஸ்.சி. மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இதனை மாணவர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி துணை முதல்வர் சகோ.அருள்ஜீவன்.சி.எஸ்.சி. மற்றும் பள்ளி நிர்வாகி சகோ.ஏசுதாசன், சி.எஸ்.சி. ஆகியோர் இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துக் கொடுத்தனர். மேலும், மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களும், மாணவர்களை சிறப்பாக வழிநடத்தி தயார் செய்தனர்