ட்ரெண்டிங்

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- மதுரை சிறப்பு ரயில்கள்!

 

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் மற்றும் மதுரை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜன.11- ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில் ஜன.12- ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் (06067/ 06068) இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சாம்பல்பட்டி, பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் சுமார் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.