ட்ரெண்டிங்

ஆவினுக்கு ஊற்றப்படும் பாலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு!

 

சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆவினுக்கு ஊற்றப்படும் பாலுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 3.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சர் உத்தரவு படி, கடந்த 2023- ஆம் ஆண்டு டிச.18- ஆம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூபாய் 3 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தற்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜன.01 முதல் பிப்.28 வரை தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில், உற்பத்தியாளர்களால் அளிக்கப்படும் பால் ஒரு லிட்டருக்கு 50 காசு வீதம் கூடுதலாக ஆவின் பொது நிதியில் இருந்து வழங்கப்படும். 

 

இதைப் பயன்படுத்தி பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் அதிக அளவு பாலை ஆவின் நிறுவனத்துக்கு வழங்கி பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.