சேலம் மாவட்டம், சோளம்பள்ளம் பகுதியில் ஸ்ரீ சங்கீத நாட்டிய கலை கூடம் மற்றும் ஆல் இந்தியா உலக சாதனை நிகழ்வு இணைந்து நடத்திய மாபெரும் பரதநாட்டிய தொடர் உலக சாதனை நிகழ்வானது வரும் ஜன.05- ஆம் தேதி அதிகாலை 04.30 மணிக்கு தொடங்கி ஜன.06- ஆம் தேதி அதிகாலை 12.45 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்துள்ளது. சிறப்பு விருந்தினராக, ஆல் இந்திய வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் தலைவர் முனைவர்.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் முனைவர்.கலைவாணி, முனைவர்.லாவண்யா முன்னிலையில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
பரதநாட்டிய மாணவ, மாணவிகள் தங்களது நடன கலைகளைத் தொடர்ந்து இடைவிடாது நடனமாடி 20 மணி நேரம் 15 நிமிடங்கள் உலக சாதனை படைத்துள்ளனர். நிகழ்ச்சியில், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். சுமார் 114 மாணவர்கள் பங்கேற்று 233 பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். 20 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடனமாடி மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனையாக அங்கீகாரம் செய்துள்ளது.


