ட்ரெண்டிங்

டி.எம்.செல்வகணபதி என்னும் நான்....!

நாடாளுமன்ற மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரைக் குறிப்பிட்டு மக்களவையில் தி.மு.க. எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றனர். 

வருங்காலம் எங்கள் உதயநிதி எனவும் கூறி தி.மு.க. எம்.பி.க்கள் சிலர் பதவியேற்றனர். மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக டி.எம்.செல்வகணபதி என்னும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்று கூறி நாடாளுமன்ற மக்களவையில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.