ட்ரெண்டிங்

பொங்கல் பண்டிகை- சிறப்பு ரயில்கள்! 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

அந்த வகையில், வரும் ஜன.10- ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06569), மறுநாள் (ஜன.11) காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், ஜன.11- ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ((06570), மறுநாள் (ஜன.12) காலை 06.30 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

இந்த சிறப்பு ரயில்கள் மாண்டியா, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் மட்டும் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். இவ்வாறு சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.