ட்ரெண்டிங்

பள்ளி மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டுகோள்! 

வைகுண்ட ஏகாதசி மற்றும் போகிப் பண்டிகை தினங்களில் நடைபெற உள்ள பள்ளி மாணவர்களுக்கான தேர்வை ஒத்திவைக்கக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பா.ஜ.க.வின் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் கோபிநாத் இன்று (ஜன.07) மனு அளித்துள்ளார். 

அந்த மனுவில், திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொள்வோர் தமிழகத்தில் இந்து விரோதப் போக்குடன் தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்துக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் ஜன.10-ல் மார்கழி திருவிழாவாகிய வைகுண்ட ஏகாதசி மற்றும் ஜன.13-ல் தமிழர் திருநாளான போகிப் பண்டிகையில் 10, 11, 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண நாட்களாக இருந்தால் பள்ளி மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்துக்களின் முக்கிய பண்டிகை தினங்களில் அரசு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்துவது இந்துக்களை இன்றும் ஏளனப்படுத்துவது போல் உள்ளது. எனவே ஜன.10, 13-ல் தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகளை ஒத்திவைக்க ஆவணம் செய்ய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.