சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தொடரில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜூ மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மாரியப்பனின் கிராமத்தில் பொதுமக்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


