ட்ரெண்டிங்

பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியைத் துவக்கி வைத்த அமைச்சர்! 

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டியினை இன்று (ஜன.04) கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இப்போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ.தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும் மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற்றது. மேலும் 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடைபெற்றது.

இன்றையதினம் நடைபெற்ற 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியானது 10 கி.மீ தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் துவங்கி கோரிமேடு வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது. அதேபோன்று 13 வயதிற்குப்பட்ட மாணவர்கள், 15 வயதிற்குட்பட்ட மாணவிகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியானது 15 கி.மீ தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் துவங்கி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் சென்று மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது.

மேலும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியானது 20 கி.மீ தூரத்திற்கு மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் துவங்கி ஏற்காடு அடிவாரம், எம்ரால்ட் வேலி பள்ளி மற்றும் அஸ்தம்பட்டி வழியாக மீண்டும் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நிறைவடைந்தது. பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக 
ரூபாய் 5,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000 வழங்கப்படுகிறது. மேலும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூபாய் 250 வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.