ட்ரெண்டிங்

சேலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள்?

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் 25 பேரூராட்சிகளின் பட்டியலையும், 13 நகராட்சிகளின் பட்டியலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக உருவாகும் நகராட்சிகள், பேரூராட்சிகள் எவை என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். 

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயருகிறது. அதேபோல், ஏற்காடு, மணிவிழுந்தான், தலைவாசல் ஆகிய ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அமானி கொண்டலாம்பட்டி, செட்டிச்சாவடி, கொண்டப்பநாயக்கன்பட்டி, எருமாப்பாளையம், சன்னியாசிக்குண்டு ஆகிய ஊராட்சிகள், சேலம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆத்தூர், மேட்டூர் ஆகிய நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதோடு, அப்பகுதிகளும் வளர்ச்சி பெறும்.