ட்ரெண்டிங்

மயிலாடுதுறை- சேலம் இடையே தினசரி ரயில் சேவை - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

மயிலாடுதுறை- சேலம் இடையே தினசரி ரயில் சேவை - சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு! 

வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் முதல் மயிலாடுதுறை- சேலம் இடையேயும், சேலம்- மயிலாடுதுறை இடையேயும் தினசரி ரயில் சேவை வழங்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் மயிலாடுதுறை- சேலம் இடையேயும், சேலம்- மயிலாடுதுறை இடையேயும் தினசரி ரயில் சேவை வழங்கப்படும். இந்த ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். 

ஆடுதுறை, திருவிடைமருதூர், ஆலக்குடி, திருவெறும்பூர், பொன்மலை, குளித்தலை, கலங்காணி, ராசிபுரம், மல்லூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மயிலாடுதுறையில் இருந்து காலை 06.20 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 01.35 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கத்தில் மதியம் 02.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 09.40 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்தைச் சென்றடையும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.