ட்ரெண்டிங்

தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம்! 


தி.முக .வின் சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம், சேலம் கருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன், மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். 

ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மண்டலத்தில் உள்ள சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 500- க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப  அணியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். 

கூட்டத்தில் 2026- ல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராவது, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடுகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.