ஆன்மிகம்

அரோகரா முழக்கம் எழுப்பிய பக்தர்கள்....சூரனை வதம் செய்த முருகன்!

 

கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற முருகனின் தலங்களான பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி, மருதமலை உள்ளிட்ட திருக்கோயில்களில் இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

 

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் உள்ள முருகன் திருக்கோயில், அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் அருள்மிகு குமரகுரு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், புத்திரக்கவுண்டன்பாளையத்தில் உள்ள முத்துமலை முருகன் திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

 

 

பக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்ப, சக்திவேலைக் கொண்டு சிங்கமுகாசூரனின் தலையைக் கொய்து முருகன் வதம் செய்தார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்தசஷ்டி விழா களைகட்டியது. அதைத் தொடர்ந்து, நாளை (நவ.19) மாலை 05.00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.