ட்ரெண்டிங்

மாநாட்டை நோக்கி சேலம் மாவட்ட பா.ம.க.வினர்!

திருவண்ணாமலையில் இன்று (டிச.21) மாலை 04.00 மணியளவில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள், வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகள் பேருந்துகள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மாநாட்டு திடலை நோக்கிப் புறப்பட்டனர். 

குறிப்பாக, சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. செயலாளரும், சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான அருள் தலைமையில் பா.ம.க.வினர் மாநாட்டு திடலை நோக்கி புறப்பட்டுள்னர். அதேபோல், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளரும், மேட்டூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள் மேள, தாளங்கள், ஆட்டம், பாட்டத்துடன் மேச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டுள்ளனர்.