கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை- சேலம் வழித்தடத்தில் விமான சேவை கட்டணத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines) விமான நிறுவனம் உயர்த்தியுள்ளதால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, சேலத்தில் இருந்து சென்னை செல்வதற்கு ரூபாய் 3,000 ஆக இருந்த விமான சேவை கட்டணத்தை சுமார் ரூபாய் 7,451 வரை விமான நிறுவனம் உயர்த்தியுள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து சேலம் வருவதற்கு ரூபாய் 4,000 முதல் ரூபாய் 7,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விமான கட்டண உயர்வால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விமான கட்டண உயர்வால் சேலம் விமான பயணிகள் தங்களின் கார்களிலோ, ஆம்னி பேருந்துகளிலோ செல்லத் தொடங்கியுள்ளனர்.


