ட்ரெண்டிங்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றம்! 

ஓசூர் ரயில்வே யார்டில் தொழில்நுட்ப பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

அதன்படி, டிச.23, 24, 25, 27, 28, 31, ஜன.01, 04, 05, 06 ஆகிய தேதிகளில் காலை 07.25 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து கோவை- பெங்களூரு கண்டோன்மெண்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் (206420, மறுமார்க்கத்தில், டிச.23, 24, 25, 27, 28, 31, ஜன.01, 04, 05, 06 ஆகிய தேதிகளில் மதியம் 02.20 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட்- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.