ட்ரெண்டிங்

தேசிய கொடிகள் விற்பனை அமோகம்!

 

நாட்டின் 76- வது குடியரசுத் தினம் நாளை (ஜன.26) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, பள்ளி, கல்லூரிகள், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி மரியாதைச் செலுத்துவது வழக்கம். 

 

இதையொட்டி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு தேசியக்கொடிகள் அதிகளவில் விற்பனைக்காகக் குவிந்துள்ளது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 

 

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் தேசிய கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக சட்டைகளில் பொறுத்தப்படும் சிறிய அளவிலான தேசியக்கொடிகள் முதல் தேசியக்கொடி தோரணங்கள், துணியிலான கொடிகள் உள்பட பல்வேறு வகையிலான தேசியக்கொடிகள் உள்ளது. 

 

இங்கிருந்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர் எனத் தெரிவித்தார்.