ட்ரெண்டிங்

அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!  

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றிய கழகச் செயலாளர் தனசேகரன் மற்றும் பேரூர் கழக செயலாளர் சரண்பிரபு ஆகியோர் ஏற்பாட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த குன்னத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் திவியா விஜய், இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஹரி, கொங்கு இளைஞரணி துணைச் செயலாளர் கோபால்சாமி, நாம் தமிழர் கட்சியின் இடையர்பாளையம் மனோஜ், கருப்பசாமி, கார்த்திக், மதன், ஊத்துக்குளி தி.மு.க. மகளிரணி நிர்வாகி கண்ணியம்மாள், நல்லிபாளையம் ஊராட்சியைச் சேர்ந்த ஆனந்தகுமார், அம்மாசி, கொங்கு இளைஞரணி நிர்வாகி ரஞ்சித், சூரியம்பாளையம் பகுதி தி.மு.க. சதாசிவம், ஆயிகவுண்டம்பாளயம் காங்கிரஸ் கட்சி நிர்வாகி துரைசாமி, வெங்கடகிரி,யமுனாதேவி, நாடார் பேரவையைச் சேர்ந்த குன்னத்தூர் பேரூராட்சித் தலைவர் பிரேம்குமார், கௌதமன் உள்பட 100- க்கும் மேற்பட்டோர் தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது புதியதாக கட்சியில் இணைந்தவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார். ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.