ட்ரெண்டிங்

அமித்ஷாவை கண்டித்து 2- வது நாளாக தொடரும் போராட்டம்! 

அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து சேலம் மாவட்டத்தில் 2- வது நாளாக இன்றும் (டிச.20) போராட்டம் நடைபெற்றது. 

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று (டிச.20) குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து வழக்கறிஞர்கள், அம்பேத்கர் புகைப்படத்தை கையில் ஏந்தி மத்திய அரசு மற்றும் அமித்ஷாவிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

அதேபோல், அம்பேத்கார் மக்கள் இயக்கத்தின் சார்பில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு இன்று (டிச.20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களை துணிகளால் கட்டுக் கொண்டு மத்திய அரசு, அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.