ட்ரெண்டிங்

சோனா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா!  

சேலம் ஜங்சன் செல்லும் சாலையில் அமைந்துள்ள சோனா கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இன்று (ஜூலை 07) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவை, சோனா கல்விக் குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.  

சோனா கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவிற்கு, கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். 
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பெங்களூர் போரோ எப்க்ஸ் டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மன்மோகன் கணேஷ் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது முன்னாள் துணைவேந்தர் முனைவர் குழந்தைவேல் மற்றும் மன்மோகன் கணேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் கூறியதாவது, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் சமீப காலமாக நல்ல வரவேற்பு உள்ளது. மாணவ, மாணவிகள் தற்போது உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு சோனா கல்லூரி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்கையில் சிறந்து விளங்க தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். 

அதைத் தொடர்ந்து பேசிய சோனா கல்விக் குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா, "சேலத்தில் 65 ஆண்டு பராம்பரியமிக்க எங்களது கல்வி நிறுவனம், தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தொடங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்பை உறுதி செய்யும் வகையில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.